ராமன், வாலி மீது மறைந்திருந்து அம்பு விடுத்தார். அது அவன் மேல் பாய்ந்தது. குற்றுயிராகக் கிடந்த வாலி, அம்புதொடுத்தது ராமர் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டான். சக்கரவர்த்தி திருமகனான நீ, என் மீது என்ன குற்றம்கண்டு இவ்வாறு செய்தாய்! உன்னிடம் இரக்கம் இல்லாமல் போனது ஏன் என்பது இப்போது தான் புரிகிறது. காகாசுரன், உன் மனைவிக்கு துன்பம் செய்த போது, அவனைக் கொல்ல முயன்றாய். ஆனால், துன்பம் செய்த சீதையிடமே சரணடைந்து தப்பினான். அவள் தாயன்புடன் அவனைக் காத்தாள். இன்றோ, சீதை உன் அருகில் இல்லை. அவளைப் பிரிந்து துன்பப்படுகிறாய். என்னைக் காப்பாற்ற அவள் இன்று இல்லை. அதனால், ஒரு தவறும் செய்யாத எனக்கு மரணம் கிடைத்தது! என்று சொல்லி உயிர் விட்டான்.