Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: சிம்மம் கார்த்திகை பலன்: துலாம் கார்த்திகை பலன்: துலாம்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கார்த்திகை பலன்: கன்னி
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: கன்னி

பதிவு செய்த நாள்

15 நவ
2020
08:11


உத்திரம் 2, 3 4ம் பாதம் :
    அர்த்தாஷ்டம சனியின் முடிவில் உள்ளதால் நற்பலன் ஏற்படும்.  மனதிற்கு இனிய அனுபவம் கிடைக்கும்.  தயக்கத்தை விடுத்து தைரியமாக செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். பணவரவு சிறப்பாக உள்ளதால் சேமிப்பு உயரும்.  புதிய சொத்து சேரும். தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்க நேரம் சாதகமாக உள்ளது. செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை மறதியாக வைத்துவிட்டு அவதிப்படுவீர்கள். முக்கிய விவகாரங்களில் இடைத்தரகர்களை நம்பாமல் நேரடியாக செயல்படுவது நல்லது. உடன்பிறந்தோர் வழியில் சுபவிஷயம் நிகழக் காண்பீர்கள். முன்னோர் பற்றிய சிந்தனை அவ்வப்போது வந்து போகும். வீட்டிற்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவீர்கள். வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. இரவு நேர பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பெயரில் சொத்து வாங்க முயற்சிக்கலாம். அவர்களது உடல்நிலையில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உங்கள் பணிகளை எளிதாக்கும். பூர்வீக சொத்து பிரச்னை மறையும்.  வேலைக்குச் செல்வோர் உடன் பணிபுரிவோரின் பணியையும் சேர்த்துச் செய்யும் சூழலுக்கு ஆளாவர். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வந்து சேரும். மாணவர்கள் நண்பர் உதவியோடு முன்னேற்றம் காண்பர். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.
பரிகாரம் : சரபேஸ்வரரை வழிபட்டு நன்மை பெருகும்.
சந்திராஷ்டமம் : நவ. 27

அஸ்தம் :
    தைரிய ஸ்தானத்தின் வலிமையால் தடைகள் விலகக் காண்பீர்கள். மனதில் தர்ம சிந்தனை கூடும். ஆன்மிக சந்தேகங்களில் தெளிவு கிட்டும். பெரிய மனிதர்களுடனான சந்திப்பு திருப்புமுனையைத் தரும். பணவரவு தொடர்ந்தாலும், செலவுகளும் வரிசையில் காத்து நிற்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வித்தியாசமான முயற்சிகள் வீண் விரயத்தைத் தரும். அண்டை அயலாரோடு கருத்து வேறுபாடு தோன்றும். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை எங்காவது மறந்து வைத்துவிட்டு அல்லல்படுவீர்கள். உறவினரால் உண்டாகும் கலகங்கள் நன்மையில் முடியும். ஆடை, ஆபரணம் வாங்கும் முயற்சி தள்ளிப் போகும். கடன் பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்களால் செலவு கூடுதலாகும். கழுத்து, முதுகு வலியால் அவதிப்படலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை வெற்றிக்குத் துணைநிற்கும். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உதவப் போய் பொருளிழப்பிற்கு ஆளாகலாம். பணியாளர்கள் வீண் அலைச்சலுக்கு ஆளானாலும் வருமானம் கிடைக்கப் பெறுவர். சுயதொழில் செய்வோர் தங்கள் முகராசியின் மூலம் அதிக லாபத்தினைக் காண்பர். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நேரம் கைகூடி வருவதை உணர்வீர்கள். மாணவர்கள் அறிவியல் பாடங்களில் சிரமத்தினை உணர்வர். பெற்றோர் வழியில் லாபம் வரும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்தால் நன்மை ஏற்படும். முன்னேற்றம் தரும் மாதம்.
பரிகாரம் : குலதெய்வ வழிபாட்டால் நன்மை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் : நவ. 28

சித்திரை 1, 2ம் பாதம் :
    இந்த மாத கிரக நிலை சுகமான சூழலைத் தரும். அமர்ந்த இடத்திலிருந்து நினைத்ததை அழகாக செய்து முடிப்பீர்கள். எளிதில் வெற்றி சாத்தியமாவதால் உற்சாகமுடன் பணியாற்றுவீர்கள். நட்சத்திர அதிபதி செவ்வாயின் பார்வை பலம் செயலில் வேகத்தைக் கூட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தனாதிபதியின் சாதகமான அமர்வால் சேமிப்பு உயரும். அதை சொத்தாக மாற்றம் செய்யும் வாய்ப்புண்டு. உறவினர் தங்கள் குடும்பப் பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு வருவர். அறிவுரை கலந்த பேச்சால் கவுரவம் அடைவீர்கள். சரியான நேரத்திற்கு சாப்பிட இயலாமல் போகும். ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்பொருட்கள் சேரும். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவப் போய் சங்கடத்தை சந்திப்பீர்கள். மாற்றுமொழி பேசுவோரிடம் கவனம் தேவை. தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதில் சிரமத்தைத் தந்தாலும் இரவில் உபயோகரமாக அமையும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் வேகத்தோடு, விவேகமும் இணைந்திருக்கும்.  நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். வயதில் முதிர்ந்த உறவினருக்கு பணஉதவி செய்வீர்கள். மனதில் தர்ம சிந்தனை கூடும். பணியாளர்கள் அலுவல் கோப்புகளை கவனமாக கையாள்வது அவசியம். சுயதொழில் செய்வோர் அதிக லாபம் காண்பர். கூட்டுத்தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளை சரிவர வைவது நல்லது. மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்வர். சுகம் தரும் மாதம் இது.
பரிகாரம் : முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.
சந்திராஷ்டமம் : நவ. 28, 29

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar