Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: கன்னி கார்த்திகை பலன்: விருச்சிகம் கார்த்திகை பலன்: விருச்சிகம்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கார்த்திகை பலன்: துலாம்
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: துலாம்

பதிவு செய்த நாள்

15 நவ
2020
08:11


சித்திரை 3, 4ம் பாதம் :    
    ராசிநாதன் சுக்ரனின் சாதக அமர்வும், ஆட்சி பலமும் மகிழ்ச்சியோடு செயல்பட வைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவதில் தன்னிகரற்று திகழ்வீர்கள். எந்த செயலையும் உடனடியாக முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். பணவரவு சிறப்பாக அமையும். குடும்பத்திற்குத் தேவையான பர்னிச்சர் சாமான்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது செயலிழந்து பொறுமையை சோதிக்கும். தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்குவீர்கள். குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவதில் ஆர்வம் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி காண்பீர்கள். உறவினர் சந்திப்பால் உற்சாகம் கூடும். பிள்ளைகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். ரத்த அழுத்த குறைபாடு உள்ளவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்து கொள்வதில் சற்றே சிரமப்படுவீர்கள். நெருங்கிய நண்பருடன் வீண் விவாதம் காரணமாக கருத்து வேறுபாடு வரலாம். வேலைக்குச் செல்வோர் மாத இறுதியில் பிரச்னையை எதிர்கொள்வர். சுயதொழில் செய்வோர் போட்டி பொறாமையால் தொல்லைகளை சந்திப்பர்.  மாணவர்கள் வகுப்பில் முன்னிலை வகிப்பர். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பூர்வீக சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். சுறுசுறுப்பு நிறைந்த மாதம் இது.
பரிகாரம் : விஷ்ணு துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
சந்திராஷ்டமம் : நவ. 29

சுவாதி
ராசிநாதன் சுக்ரனின் சாதகமான சஞ்சாரமும், நட்சத்திர அதிபதி ராகுவின் வலிமையும் உங்களை ஓய்வின்றி செயல்பட வைக்கும். எப்போதும் ஏதாவது வேலையில் ஈடுபட்டு கொண்டிருப்பீர்கள். மற்றவர் வீட்டு வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். இயலாதவருக்கு உதவுவதை கவுரவமாக கருதுவீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. அவசரப்பட்டு வாக்குறுதி அளித்து விட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பொருள் வரவு சீராக இருக்கும். எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தோரால் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாகலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சமாக பயன்படும். அதே நேரத்தில் சமூக வலைதளங்கள் மூலம் வரும் தகவலை நம்பி செயலில் இறங்கி விடாதீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் ஏமாற வாய்ப்புண்டு. உறவினர் வழியில் சில பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை கொள்வீர்கள். நவம்பர் மாத இறுதியில் பிரயாணம் செல்ல வாய்ப்புண்டு. வீண் கவுரவத்திற்காக செய்யும் செலவுகள் கூடும். முன்னோர் பற்றிய சிந்தனை அடிக்கடி மனதிற்குள் வந்து போகும். பணியாளர்கள் அடுத்தவருக்கு உதவி செய்யப் போய் பெரிய பொறுப்பை சுமக்க நேரிடும். சுயதொழில் செய்வோர் அதிக லாபம் காண்பர். மாணவர்கள் பொது அறிவை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவர். உழைப்பால் உயரும் மாதம் இது.
பரிகாரம் : நாகலிங்க சுவாமியை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : நவ. 30

விசாகம்1, 2, 3ம் பாதம்:
    நட்சத்திர அதிபதி குரு நீசம் பெற்றாலும், சுக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் சுகமான வாழ்வு அமையும். ராசி அதிபதி சுக்ரனின் ஆட்சி பலமும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். தனஸ்தானத்தின் வலிமையால் பணவரவு அதிகரிக்கும்.  சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. வீட்டில் தங்கம், வெள்ளி ஆபரணம் சேரும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி  கடனுதவி கிட்டுவதோடு இதுவரை ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்தில் ஒவ்வொருவரின் தனித்தனி கருத்துக்களையும் அனுசரித்துச் செல்வீர்கள்.  நகைச்சுவை மாறாமல் அதே நேரம் கறாராகப் பேசுவீர்கள். அனுசரணையான அணுகு முறையால் அண்டை, அயலார் மத்தியில் கவுவரம் காண்பீ்ரகள். உடன்பிறந்தோருடன் உண்டான கருத்துவேறுபாடு மறையும். மறதியால் சில நேரம் அவதிப்படுவீர்கள். முக்கிய பணிகளில் மற்றவரை நம்பாமல் நேரடியாக செய்லபடுவது நல்லது. உறவினர்களுக்கு உதவப்போய் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவது அவசியம். ஆன்மிகச் சந்தேகங்கள் மனதில் அதிகமாக ஏற்படும். கண் சார்ந்த பிரச்னைகளால் சிரமப்படலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். எதிர்கால நன்மைக்காக புதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் மதிப்புயரக் காண்பர். சுயதொழில் செய்வோருக்கு வெளியில் இருந்து வரவேண்டிய பாக்கித்தொகைள் வசூலாகும். மாணவர்கள் வகுப்பினில் போட்டியான சூழலை உணர்வார்கள்.  செல்வம் சேரும் மாதமிது.
பரிகாரம் : வெள்ளி தோறும் கோபூஜை செய்து வழிபடுங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 1

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar