Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: விருச்சிகம் கார்த்திகை பலன்: மகரம் கார்த்திகை பலன்: மகரம்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கார்த்திகை பலன்: தனுசு
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: தனுசு

பதிவு செய்த நாள்

15 நவ
2020
08:11


மூலம் :ராசிநாதன் குரு நீசம் பெறும் நிலையில் நட்சத்திர அதிபதி கேதுவின் 12ம் இடத்துச் சஞ்சாரம் அதிக செலவுகளைத் தரலாம். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காகக் கூடுதலாக செலவழிப்பீர்கள். குறைந்த விலையுள்ள பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும். ஆன்மிகம் சார்ந்த செலவு அதிகரிக்கும். தான, தர்மம் என்ற பெயரிலும் போலியான சாமியார்கள் வழியிலும் கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் ஏமாறுவதற்கான வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை தேவை. சேமிப்பு துணையிருப்பதால் செலவு பற்றி கவலை இல்லை. என்றாலும் ஆற்றில் போட்டாலும் அளந்து போடு எனபதை நினைவில் கொள்ளுங்கள். எடுத்த செயல் முடிவடையாமல் சற்று இழுபறி நீடிக்கலாம். ஆயினும் நிதானமான அணுகுமுறையோடு பதற்றம் ஏதுமின்றி செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்தினரோடு ஆன்மிகப் பயணம் செல்லும் வாய்ப்புண்டு. வயதில் மூத்த உறவினரின் சந்திப்பு உங்கள் சிந்தனையில் மாற்றத்தைத் தோற்றுவிக்கும். பிள்ளைகளின் செயல்கள் குடும்பப் பெருமையை உயர்த்தும். சம்பந்தமில்லாத பணிகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதால் உடல்நிலையில் தளர்ச்சி உண்டாகலாம். வாழ்க்கைத்துணையின் செயல்வேகத்தோடு ஈடுகொடுப்பதில் தடுமாற்றம் காண்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையால் நீண்ட நாள் குடும்பப் பிரச்னை முடிவிற்கு வரும். வேலைக்குச் செல்வோர் முக்கிய அலுவல் கோப்புகளைக் கையாளுவதில் கவனம் செலுத்துவது அவசியம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் கவனம் கொள்ளுங்கள். மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடத்தில் முன்னேற்றம் காண்பர். மகிழ்ச்சி தரும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீகிருஷ்ணர் வழிபாடு மனமகிழ்ச்சி தரும்.
சந்திராஷ்டமம் : டிச. 4

பூராடம்: 12ம் இடத்தின் வலிமையோடு ஏழரைச்சனியின் தாக்கமும் தொடர்வதால் தடைகளைக் காண்பீர்கள். எளிதில் முடிந்து விடும் என எண்ணிய விஷயம் இழுபறியைத் தரும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருப்பதால் பல விவகாரங்களில் உங்களின் சமாளிப்புத் திறனை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். செலவு அதிகரித்தாலும் அதற்கேற்ப பணவரவு தொடரும். நீண்ட நாளாக விரும்பிய பொருள் ஒன்றை மாத இறுதியில் வாங்குவீர்கள். அடுத்தவர் செய்யும் தவறை உணர்த்தும் வகையில் பேசுவீர்கள். அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடு வரலாம். உறவினர் வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வாகனத்தால் இனிய அனுபவம் கிடைக்கும். வாகன பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். பிள்ளைகளின் செயல்வேகம் உங்களை பிரமிக்க வைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆறுதலான பேச்சு உற்சாகத்தோடு செயல்பட வைக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை வரலாம். உணவுப் பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. கவுரவம் கருதி செய்யும் செலவுகள் அதிகரிக்கும்.  பெற்றோரின் மன நிலையில்  கவனம் செலுத்துவது அவசியம். வெளியூர், வெளிநாடுகளில் வேலை செய்வோர்  குடும்பத்தாருடன் தொலைதொடர்பு சாதனங்களின் மூலம் பேசி வருவதால் உற்சாகத்தோடு பணியாற்ற இயலும். பணியாளர்கள் முக்கிய செயல்திட்டத்தில் அதிகாரியுடன் கருத்து வேறுபாடு கொள்வர். சுயதொழில் செய்வோர் லாப நஷ்டம் பாராமல் முழுமையான ஈடுபாட்டுடன் தொழிலை நடத்துவர். மாணவர்கள்  சிந்தனைச் சிதறலால்  தடுமாற்றம் காண்பர். தடைகளைத் தாண்டி வெற்றி காணும் மாதம் இது.
பரிகாரம் : அனுமன் வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.
சந்திராஷ்டமம் : டிச. 4, 5

உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாத கிரக நிலை சற்று அலைச்சலைத் தரும். எளிதில் முடிந்து விடும் என எண்ணிய செயல் இழுபறியில் நிற்கும். டிசம்பர் மாதத்தின் முற்பாதியில் புதிய முயற்சியையும் தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் குரு நீசம் பெறும் நிலையில் நட்சத்திர அதிபதி சூரியன் 12ல் மறைவதால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். நீங்கள் நல்லது நினைத்து செய்யப்போக அது மாற்றுப் பலனைத் தரலாம். பேசும் வார்த்தைகள் சுற்றியுள்ளோரால் தவறாகப் பொருள் காணப்பட்டு சிரமம் தரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். பண வரவு சீராக இருக்கும். இந்த மாதத்தில் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அடுத்தவர்களின் குடும்பப் பிரச்னைகளில் தலையிடுவது நல்லதல்ல. வயதில் முதிர்ந்த உறவினர் ஒருவர் மூலம் குடும்பப் பாரம்பரியத்தை உணர்ந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகள் வீண் சிரமத்தைத் தரும். உடன்பிறந்தோருடன் லேசான கருத்து வேறுபாடு தோன்றி மறையும். வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளின் வாழ்வினில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடல்நிலையில் உண்டாகும் சிரமங்களை வாழ்க்கைத்துணையோடு பகிர்ந்துகொள்வது நன்மை தரும். ஆன்மிக சந்தேகங்கள் அவ்வப்போது மனதில் இடம்பிடிக்கும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரின் பொறாமை காரணமாக வீண்பழியினை சுமக்க நேரிடலாம். கவனம் தேவை. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பணிகள் எளிதில் முடிவிற்கு வராது இழுபறியைத் தந்து கொண்டிருக்கும். சுயதொழில் செய்வோர் கடுமையான போட்டியினை சந்திப்பார்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மாதம் இது.
பரிகாரம் : சரபேஸ்வரர் வழிபாடு சங்கடம் போக்கும்
சந்திராஷ்டமம் : டிச. 5

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar