Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: தனுசு கார்த்திகை பலன்: கும்பம் கார்த்திகை பலன்: கும்பம்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கார்த்திகை பலன்: மகரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: மகரம்

பதிவு செய்த நாள்

15 நவ
2020
08:11

உத்திராடம் 2, 3, 4ம் பாதம்:    இந்த மாத கிரக நிலை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். ராசிநாதன் சனியும், குருவும் பரிவர்த்தனை பெற்றுள்ள நிலையில் நட்சத்திர அதிபதி சூரியனின் 11ம் இடத்து அமர்வு வெற்றியை நோக்கி பயணிக்கச் செய்யும். விவேகத்துடனும் விரைவாகவும் செயல்பட்டு கவுரவம் அடைவீர்கள். எதிர்கால நலம் கருதி புதிய செயல்திட்டங்களில் இறங்க இந்த மாதம் துணை நிற்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நயமான நகைச்சுவை மூலம் அடுத்தவர் மனம் கவர்வீர்கள். நண்பர் ஒருவரிடம் ஒப்படைத்த விஷயம் முடிவிற்கு வரும். புதிய மனிதர் ஒருவருடனான சந்திப்பு நட்பாக மலரும். உறவினர் இல்ல விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். எதிர்பாராத திடீர் பயணங்களில் நல்ல ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயரும். சிந்தனையில் இருப்பதை நடைமுறை வாழ்வில் செயல்படுத்த சில காலம் காத்திருக்க நேரிடும். வாழ்க்கைத்துணையின் பணிக்கு உறுதுணை செய்வீர்கள். வீண் செலவு குறையும். கடன் பிரச்னை கட்டுப்படுத்துவதில் ஓரளவுக்கு வெற்றி காண்பீர்கள். வயதில் மூத்தவர் ஒருவரின் ஆலோசனைகள் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கும். பணியாளர்கள் அலுவலகத்தில் தங்களின் நிர்வாகத் திறமையின் மூலம் உயர்வு காண்பர். சுயதொழில் செய்வோர் நல்ல ஆதாயம் காண்பர். கலைத்துறையினர் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் சக மாணவர்களுக்கு கற்றுத்தரும் அளவிற்கு உயர்வடைவர். குறிப்பாக இந்த மாதத்தில் உங்கள் சிந்தனைகளும், செயல் திட்டங்களும் உங்கள் உயர்விற்கு வழிவகுக்கும். கவுரவம் உயரும் மாதம் இது.    
பரிகாரம் : அமாவாசை நாளில் ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம்.
சந்திராஷ்டமம் : டிச. 6

திருவோணம்: மாதத்தின் துவக்கத்தில் சில குழப்பங்களுக்கு ஆளாகும் நீங்கள் நவ.17 மாலை முதல் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். நெடுநாளைய ஆசைகள் எளிதில் நிறைவேறும். நினைத்ததை எளிதாக சாதித்துக் கொள்ள நவம்பர் மாதத்தின் கடைசி பத்து நாள் ஏற்றதாக அமையும். குடும்பத்தினர் தங்கள் தேவைக்கு உங்களை பெரிதும் சார்ந்திருப்பர். குடும்ப விவகாரங்களில் உங்கள் பங்களிப்பு  முக்கியத்துவம் பெறும். உறவினர் இல்ல விசேஷங்களில் நினைவில் நிற்கும்படியான அனுபவத்தைப் பெறுவீர்கள். அண்டை, அயலாரின் துணையோடு பொதுப்பிரச்னைகளில் முன்நின்று செயல்படுவீர்கள். சாவி, அலைபேசி போன்றவற்றை மறதியாக வைத்து விட்டு அவதிப்படுவீர்கள். கடைத்தெருவிற்கு செல்லும்போது வண்டியை பூட்டியிருக்கா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். ஞாபக மறதியின் காரணமாக அவதிப்பட நேரிடும் என்பதால் செய்யும் பணிகளை முன்னரே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் வழியில் சுப செலவை சந்திக்க நேரிடும். நெருங்கிய நண்பர் ஒருவர் பண உதவி கேட்டு வருவார். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு பக்கபலமாய்த் துணை நிற்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை சரியான பாதையில் பயணிக்கச் செய்யும். பணியாளர்கள் இந்த மாதத்தில் அலுவலகத்தில் சிக்கலான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். சுயதொழில் செய்வோர் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி புகழ், அதிக லாபம் காண்பர்.  மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதில் சிறப்பு பயிற்சி பெற வேண்டியது அவசியம். நன்மை தரும் மாதம் இது.
பரிகாரம் : பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 7

அவிட்டம் 1, 2ம் பாதம்: ராசிநாதன் சனியும் ராசியில் உள்ள குருவும் பரிவர்த்தனை பலம் தரும் நிலையில் நட்சத்திர அதிபதி செவ்வாயின் சாதகமான சஞ்சார நிலை இந்த மாதத்தில் உங்கள் பணிகளை எளிதாக முடியச் செய்யும். தன்னம்பிக்கையும் தைரியமும் செயல் வெற்றிக்குத் துணை நிற்கும். ராசியில் இருக்கும் குரு உங்களை நேரான பாதையில் பயணிக்கச் செய்வார். உடன்பிறந்தோருடன் இணைந்து குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களைத் தவறாக எண்ணியவர்கள் மனம் மாறி மீண்டும் வந்து இணைவர். பணவரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயர்வடையும். நண்பரை நம்பி ஒப்படைத்த செயல்களில் இழுபறி நீடிக்கும்.  எதிலும் அடுத்தவர்களை நம்பாமல் நேரடியாக செயல்பட வேண்டியிருக்கும். உறவினர்களால் உண்டான கலகம் நன்மையில் முடியும். மாதத்தின் பிற்பாதியில் அண்டை, அயலாரோடு கருத்து வேறுபாடு தோன்றலாம். மனை, நிலம் வாங்க முற்படுவோருக்கு செவ்வாயின் துணையோடு வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் வேகமான செயல்கள் அதிக செலவை ஏற்படுத்தும். நரம்புத்தளர்ச்சியால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். தம்பதியராக இணைந்து செய்யும் செயல்கள் வெற்றி பெறும். நண்பர்கள் வழியில் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். பணியாளர்கள் அடுத்தவர் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரிடும். சுயதொழில் செய்வோர் தைரியமுடன் செயல்பட்டு அதிக லாபம் காண்பர். அதே நேரத்தில் திருஷ்டி தோஷத்தினால் அவதிப்பட நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மாணவர்கள் படிப்பதில் சிரமம் காண்பர். பெற்றோரின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். தைரியத்தோடு சாதிக்கும் மாதம் இது.
பரிகாரம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : டிச. 7, 8

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar