பதிவு செய்த நாள்
26
மே
2012
10:05
சிவகாசி:சிவகாசி மீனம்பட்டி கல்யாண ராமபிரான் கோயில் கும்பாபிஷேக விழா, யாகசாலை பூஜையுடன் துவங்கின. நேற்று காலை கோபூஜை, ஹோமங்கள் நடந்தன.யாகசாலை பூஜைகளில் நாலாயிர திவ்ய பிரபந்தம், வேதபாராயணத்தை ஆழ்வார்கள் பாடினர். நேற்று காலை கோபூஜை, ஹோமங்கள் நடந்தன. நேற்று மதியம் 12மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோஷ்டியூர் மாதவன்சுவாமிகள் நடத்தினார். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்அறங்காவலர் குழுதலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் பாலகிருஷ்ணன், தளபதி உட்பட முக்கிய பிரமுகர்கள் என, ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இரவில் சுவாமி வீதி உலா வந்தது. பஜனை, கச்சேரி, வாண வேடிக்கை, அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கம்மவார் நாயுடு இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.