பதிவு செய்த நாள்
26
மே
2012
10:05
திண்டிவனம்:திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பழமையான கனகவல்லி நாயிகா சமேத லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதற்காக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. கடந்த 23ம் தேதி யாகசாலை நிர்மாணம் செய்து மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 24ம் தேதி காலை 8 மணிக்கு சாற்றுமறை, அஷ்டபந்தனம் சமர்பித்தல் நடந்தது. மாலை 3 மணிக்கு, மஹாசாந்தி கும்ப திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு நித்ய ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், யாகசாலை புண்யாஹவாசனம் ஆகிய பூஜைகள் நடந்தது. காலை 8 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளும், மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. பின் யாக சாலையிலிருந்து கும்ப கலசங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து, ராஜகோபுரம், மூலவர் லட்சுமி நரசிம்ம சுவாமி விமானம், கனகவல்லி தாயார், ஆண்டாள் நாச்சியார், கருடாழ்வார், ஆஞ்சநேய மூர்த்தி, சொர்க்க வாசல் மண்டபத்திற்கு கலசங்களை சுமந்து வந்தனர்.
காலை 9.15 மணிக்கு, ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னதி களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் நடந்தது. தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் தீபாராதனை நடந்தது.விழாவில் அமைச்சர் சண்முகத் தின் சகோதரர் ராதாகிருஷ்ணன், அரிதாஸ் எம்.எல்.ஏ., நகர மன்ற சேர்மன் வெங்கடேசன், ராம் டெக்ஸ் தியாகராஜன், வெங்கடேசன், பி.ஆர்.எஸ்., ரங்கமன்னார், முன்னாள் பேரவை மாவட்ட செயலர் முரளி, நகர மன்ற துணை சேர்மன் முகமது ஷெரீப், நியூ பாண்டியன் மெட்டல் சுரேஷ், அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, தக்கார் சிவாகரன், செயல் அலுவலர் முத்துலட்சுமி, ராம்லால் ரமேஷ், வழக்கறிஞர் பத்மநாபன், கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் பக்தர்கள் திரளாக வழிபட்டனர்.