தீபாவளி திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை ‘‘ கிருஷ்ணா! முகுந்தா! முராரி!’’ என வழிபடுவது சிறப்பு. இதில் முராரி என்னும் திருநாமம் அசுரனின் பெயரால் ஏற்பட்டது. கிருஷ்ணர் போருக்குச் சென்ற போது, நரகாசுரனின் தளபதி முரன் என்பவன் போருக்கு வந்தான். ஐந்து தலை கொண்ட இவனை அழிக்க கிருஷ்ணர் தனது சக்கரத்தை ஏவினார். அது அசுரனின் ஐந்து தலைகளையும் அறுத்து மறைந்தது. முரனைக் கொன்றதால் கிருஷ்ணருக்கு ‘‘ முராரி ’’ என பெயர் ஏற்பட்டது.