திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ஆனது. இவளை தீபாவளி நாளில் மட்டுமே முழுமையாக தரிசிக்கலாம். மற்ற நாட்களில் கதவின் துவாரம் வழியாக மட்டும் தரிசிக்க முடியும். தீபாவளி மற்றும் அதன் மறுநாள் சன்னதி முழுவதும் இனிப்பு வகைகளால் நிரப்பி அம்மனை பூஜிப்பர். இறுதியில் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக அளிப்பர். தீபாவளியன்று காசியில் அன்னபூரணி லட்டுத்தேரில் உலா வருவாள்.