ஓசூர்: ஓசூரில், காலபைரவர் கோவில் கும்பாபி?ஷக விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலின், உப கோவிலான காலபைரவர் கோவில், பல லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபி?ஷக விழா நேற்று நடந்தது. கொரோனா காலம் என்பதால், கூட்டம் சேர்க்காமல் கும்பாபி?ஷகத்தை நடத்த, சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் திரண்டனர். குறிப்பாக, கும்பாபி ?ஷகத்தின் போது, சாரம் மற்றும் விமானத்தின் மீது அதிகளவு நபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்பது விதி. ஆனால், கோவில் கோபுரத்தின் மீதும் அதிகளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். முக கவசம் அணியாமல் பலர் பங்கேற்றனர்.