கடலுார்: கார்த்திகை மாதம் இரண்டாம் சோமவரத்தையொட்டி, கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமையில் சிவனை வழிபடுவது உகந்தது. கார்த்திகை மாத இரண்டாம் சோமவாரமான நேற்று கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 108 சங்குகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு யாகம் நடந்தது. மூலவருக்கு 108 சங்கு அபிஷேகம் நடத்தி, தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.