பதிவு செய்த நாள்
30
நவ
2020
02:11
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், நேருஜி வீதியில் உள்ள, புற்று கோவிலுக்கு, நாகர் கற்சிலை பிரதிஷ்டை செய்ய, மக்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து, 2.5 அடி உயர கற்சிலை வடித்து பூஜை செய்யப்பட்டது. நேற்று முன்தினம், கல்வடங்கம் காவிரியாற்றில், தண்ணீர் எடுத்து வந்து, ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, நாகர் சிலைக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. அன்றே, கணபதி யாகம், வாஸ்து பூஜையுடன் பிரதிஷ்டை விழா தொடங்கியது. நேற்று, நவக்கிரகம், குபேரலட்சுமி, சர்ப தோஷம் உள்ளிட்ட யாகங்கள் பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, சிலை பிரதிஷ்டை கும்பாபி?ஷகம் நடந்தது. ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், நைனாம்பட்டியில் நாகராஜ, நாகராணி கோவில் உள்ள நிலையில், புதிதாக புற்று கோவில் கட்டி நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.