நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் குளத்திலுள்ள மண்டபத்தில் விநாயகர் சிலை மூழ்கும் அளவிற்கு மழை நீர் நிரம்பியுள்ளது. கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத் தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. இக் கோவில் குளத்தின் நடுவே மண்டபத்தில் விநாயகர் சிலை உள்ளது. எவ்வளவு கனமழை பெய்தாலும், இக்குளத்தில் உள்ள விநாயகர் சிலை நீரில் மூழ்கியது இல்லை . இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பூலோகநாதர் கோவில் குளத்தில் அதிகளவு மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், மண்டபத்தில் உள்ள விநாயகர் சிலை மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர்.