பாலா திரிபுரசுந்தரி கோவிலில் வலம்புரி சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2020 12:12
புதுச்சேரி: பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் நாளை 108 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கின்றது. புதுச்சேரி அடுத்த இரும்பை குபேரன் நகரில் அமைந்துள்ள பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் நாளை 108 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது.பைரவர் அவதரித்த தினத்தையொட்டி இக்கோவிலில் அமைந்துள்ள ஷேத்திரபால பைரவர் சன்னதியில், நாளை 7ம் தேதி மாலை 4 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேக பெருவிழா துவங்குகின்றது.தொடர்ந்து அஷ்டபைரவர் பூஜை, சங்கு பூஜை, ேஹாமம், மகா அபி ஷேகம், கலசாபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு நடக்கின்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.ஏற்பாடுகளை பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.