கரூர்: கரூர், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், 46ம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை விழா நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. குறைந்த எண்ணிக்கையில் நபர்களே அனுமதிக்கப்பட்டனர். இதன்படி, காலை, 7:00 மணிக்கு மேல் மலையைச் சுற்றி கிரிவலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 9:00 மணிக்கு, திருப்புகழ் பாடி, கோவில் படிகளுக்கு படி பூஜை செய்தனர். தொடர்ந்து, பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.