பதிவு செய்த நாள்
07
டிச
2020
02:12
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் இருந்து சபரிமலை சன்னிதானத்துக்கு, 10 டன் மளிகை பொருள், அனுப்பி வைக்கப்பட்டது. புன்செய்புளியம்பட்டி பந்தளராஜா யாத்திரைக்குழு ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும் சபரிமலை சன்னிதானத்தில், பக்தர்கள் அன்னதானத்திற்கு தேவைப்படும், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர். நடப்பாண்டு அன்னதானத்துக்கு தேவையான, 200 சிப்பம் அரிசி, 1,000 கிலோ ரவை, 500 கிலோ கடலை, 250 கிலோ துவரம்பருப்பு, 250 கிலோ பனங்கருப்பட்டி, உளுந்தம் பருப்பு, சமையல் எண்ணெய், உள்ளிட்ட, 10 டன் மளிகை பொருட்களை, நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பந்தளராஜா யாத்திரைக்குழு தலைவர் வரதராஜ் கூறியதாவது: ஏழாவது ஆண்டாக, 10 டன் மளிகை பொருட்களை சபரிமலைக்கு அனுப்பியுள்ளோம். இதன் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய். மேலும் குழுவில் உள்ள பக்தர்கள், சபரிமலை அன்னதான சேவை பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.