பதிவு செய்த நாள்
07
டிச
2020
02:12
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி கணவாயில், வெள்ளையப்பன் கோவில் அமைந்துள்ளது. அரூர்- சேலம் பிரதான சாலையில், தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, சேலம், தர்மபுரி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, ஓசூர், அரூர் உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த, ஏழு மாதங்களாக இக்கோவில் உண்டியல் திறக்கப்படாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் உண்டியல் திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 5.50 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாய் செலுத்தி இருந்தனர். இத்தொகை வழக்கமான நடைமுறைகளின் படி, வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.