விருதுநகர் : விருதுநகர் எஸ்.எப்.எஸ்., பள்ளி பின்புறம் உள்ள சித்தர் குடிலில் வருஷாபிஷேகம் நடந்தது. பரிவார தெய்வங்களான லட்சுமி விநாயகர், ஆதிபுவனையம்மன், முருகர், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டது. மூலவரான சிவலிங்கம், அருகில் வீற்றிருக்கும் அகத்திய பெருமான், வாழைக்குமரி சுவாமிகளுக்கும் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காலை 8:30 மணிக்கு கோயில் கலசத்திற்கு வருஷாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடி தொண்டர்கள் ராஜேஷ்குமார், சீனிவாசன், சரவணன் செய்திருந்தனர்.