மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த தமிழக முதல்வர் பழனிச்சாமி புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார் அவருடன் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் ,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்எல்ஏக்கள் பவுன்ராஜ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.