ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீவேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயில் விழா டிச.6ல் தொடங்கி தினமும் லட்சார்ச்சனை நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று காலை வேட்டை வெங்கடேஷ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு லட்சுமி நிருசிம்ஹஹோமம், தன்வந்திரி ஹோமம், அபிேஷகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் முன்னிலையில் வேத விற்பன்னர்கள் மந்திரம், மேளம் முழங்க வேட்டை வெங்கடேஷபெருமாள், பத்மாவதிதாயார் திருக்கல்யாணம் நடந்தது. திருமஞ்சன பிரசாதம், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் முரளி வெங்கட்ராமன், சுந்தர்ராஜன், சவுந்தர்ராஜன் செய்திருந்தனர்.