பதிவு செய்த நாள்
10
டிச
2020
12:12
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மழையால் ஐப்பசி அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்காத நிலையில் கார்த்திகை அமாவாசைக்காவது அனுமதிப்பார்களா என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் காத்திருக்கிறார்கள். இக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பவுர்ணமி ,அமாவாசையை முன்னிட்டு தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இதற்கா க பிரதோச நாள் முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதியளிப்பார்கள். சதுரகிரி வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஐப்பசி பவுர்ணமி, அமாவாசைக்கு பக்தர்கள் அனுமதிக்கவில்லை. கார்த்திகை அமாவாசையொட்டி டிச.12 பிரதோஷம் முதல் 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கபடுவார்களா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
கோயில் செயல் அலுவலர்விஸ்வநாத்கூறியதாவது: வழக்கம் போல் தரிசன அனுமதி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தின் சார்பில் செய்து வருகிறோம். மழை பெய்தால் வனத்துறை, போலீஸ், மாவட்ட அரசு நிர்வா க முடிவுகள் மற்றும் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் அனுமதிப்பது தெரியவரும், என்றார்.