தாண்டிக்குடி : திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு (சேத்தாண்டி வேடம்) ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு ஊர்வலம் வந்தனர்.மருத்துவ ரீதியாக பல நோய்களை குணப்படுத்துவதால் இம்மலைப்பகுதியில் காலங்காலமாக இவ்விழா நடக்கிறது. பூஜாரி சுதர்சன் கூறியது: சீனா, மலேசியா, ஜப்பானில் மண் குளியல் சிகிச்சை முறை தற்போதும் நடைமுறையில் உள்ளது. உடல் முழுவதும் பூசப்படும் சேற்றால் தோல் நோய் குணமாகிறது. ஆண்டுதோறும் சேத்தாண்டி வேடமணிய வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர், என்றார்.