Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிப்பெயர்ச்சி பலன்.. துலாம் : சொத்து ... தனுசு : பணவரவு கூடும் தனுசு : பணவரவு கூடும்
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை)
விருச்சிகம் : சனி கொடுக்க எவர் தடுப்பர்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : சனி கொடுக்க எவர் தடுப்பர்

பதிவு செய்த நாள்

14 டிச
2020
05:12

விசாகம் 4ம் பாதம் :  ஏழரைச் சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை பெற்று சிறப்பான காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். பொதுவாக சனி பகவான் மூன்றாம் இடத்தில் வந்து அமரும்போது வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்களை அளிப்பார் என்பார்கள். வீடு, வண்டி, வாகனம், மனை, கால்நடை போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்கும் வாய்ப்பினை உருவாக்கித் தருவார். அதுமட்டுமல்லாது, உங்கள் தேவைகள் யாவும் எளிதில் பூர்த்தியாகும். மனதில் இருந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள கால நேரம் ஏதுவாக அமையும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வரும் காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடிவடையும். நினைத்ததை நடத்தி முடிக்கும் செயல்திறன் அதிகரிக்கும். இழுபறியில் இருந்து வரும் வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவினைக் காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் மூன்றாவது கரமாக செயல்பட்டு வரும்.

நிதி : சனி பகவான் மூன்றாம் இடத்தில் ஆட்சி பலத்துடன் அமர்வதால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளியில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகைகள் விரைவில் வசூலாகும். இதுநாள் வரை கண்டு வந்த பொருளாதார கஷ்டங்கள் சீரடையும். வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சொத்துக்களை வாங்க இயலும். சனி பகவானின் திருவருளால் ஆடம்பர செலவுகள் குறைவதோடு சேமிக்கும் முயற்சியில் வெற்றி கண்டு வருவீர்கள்.


குடும்பம் : உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்படும்போது சிறப்பான காரிய வெற்றியைக் காண்பீர்கள். இதுநாள் வரை பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றிணைவார்கள். தாயார் வழி உறவினர்களால் பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உண்டு. பெற்றோரால் மருத்துவ செலவிற்கு ஆளாகக் கூடும் என்பதால் அவர்களது உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.


கல்வி : புதிய நண்பர்கள் உங்களை நாடி வருவார்கள். அவர்களுடனான நட்புறவின் மூலம் உலகியல் சார்ந்த பொது அறிவினை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் போட்டித்தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், பாரா மெடிக்கல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.


பெண்கள் : வாழ்க்கைத்துணைரைப் பின்னால் இருந்து நான்குபேர் மத்தியில் அவருக்குரிய அங்கீகாரத்தினைப் பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றுவீர்கள். சனியின் திருவருளால் சிக்கன முயற்சிகளில் வெற்றி கண்டு வருவீர்கள். குடும்பத்தில் உங்களின் நிர்வாகத்திறன் பாராட்டினைப் பெறும். அண்டை அயலாரோடு இணைந்து பொதுப்பிரச்னைகளில் தீர்வு காண முற்படுவீர்கள். நான்கு பேர் மத்தியில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும்.

உடல்நிலை: காது, மூக்கு, தொண்டை பகுதிகளில் உண்டாகும் பிரச்னைகளையும் உடல்நிலையில் அவ்வப்போது உண்டாகும் இனம்புரியாத மாற்றங்களையும் உடனுக்குடன் கவனமுடன் அணுக வேண்டியது அவசியமாகிறது. எந்தச் சூழலிலும் சுயமருத்துவம் என்பது பயன் தராது. மருத்துவர்களின் ஆலோசனை மட்டுமே பயன் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். உடன் பணி புரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர் சிறப்பான தனலாத்தினைக் காண்பார்கள். ஆட்டோ மொபைல்ஸ் துறை, கட்டிடத் துறையில் கீழ்மட்ட தொழில் செய்வோர்கள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். தொழில்முறையில் ஸ்திரத்தன்மை உண்டாகும். சனி பகவான் உங்களை வளமுடன் வாழவைக்கும் காலம் இது. மருத்துவத்துறையைச் சார்ந்த பெண்களுக்கு நல்ல் முன்னேற்றம் உண்டாகும். தொழிலதிபர்களின் தங்கள் பணியாளர்களின் ஒத்துழைப்போடு சிறப்பான வளர்ச்சியை எட்டுவார்கள்.


பரிகாரம் : வீட்டுப் பூஜையறையில் வலம்புரி சங்கினை வாங்கி வைத்து தினந்தோறும் அதில் புதிதாக நீரினை மாற்றிவைத்து பூஜை செய்து வாருங்கள். சங்குபூஜைக்கான முறையை வீட்டு புரோஹிதரிடம் அறிந்துகொண்டு முறையாக சங்குபூஜை செய்து வருவது நல்லது.

அனுஷம்: வரவிருக்கும் சனிப்பெயர்ச்சியில் சிறப்பான நற்பலன்களை அனுபவிக்க உள்ளோரில் முதன்மையானவர்கள் அனுஷ நட்சத்திரத்தைச் சேர்ந்த விருச்சிக ராசிக்காரர்கள் என்றால் அது மிகையாகாது. ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுதலை காணும் நீங்கள் வருகின்ற மூன்றாண்டு காலமும் ஆனந்தத்துடன் கூடிய வளமான வாழ்வினைக் காண்பீர்கள். கடந்த ஒன்பது ஆண்டு காலமாக அனுபவித்து வந்த சிரம நிலை மாறும். இரண்டாம் இடத்திலிருந்து இடம்பெயர்ந்து மூன்றாம் இடத்தில் சனி பகவான் அமர உள்ளார். தான் ஏற்படுத்திய காரியத்தடைகள் அனைத்தையும் விலக்கி உங்களுக்குத் தேவையானவற்றை முழு உத்வேகத்துடன் அளிப்பார். ‘சனி கொடுக்க எவர் தடுப்பர்’ என்பதனை அனுபவ பூர்வமாக உணர உள்ளீர்கள்.


நிதி : பொருளாதார நிலையில் சென்ற ஆண்டு வரை இருந்து வந்த நிலை மாறி இந்த ஆண்டில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுடைய சம்பாத்யம் அசையாச் சொத்துக்களாக உருமாற்றம் கொள்ளும் வாய்ப்பு உண்டு. தனாதிபதி குருவின் நீச பலத்துடன் கூடிய சஞ்சாரம் நிதி நெருக்கடியைத் தந்து கொண்டிருந்தாலும் 2021 நவம்பர் மாத்திற்கு மேல் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைக் காண்பீர்கள். அநாவசிய செலவுகள் முற்றிலுமாகக் குறையும்.


குடும்பம் : கடந்த காலத்தில் உங்களோடு கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து சென்ற உறவினர்கள் உண்மை நிலையை உணர்ந்து உங்களோடு வந்து இணைவார்கள். உடன்பிறந்தோருடன் இணைந்து செய்யும் காரியங்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவதோடு குடும்பத்தின் அந்தஸ்தினையும் உயர்த்தும். நீண்ட காலமாக விடுபட்டிருந்த முன்னோர் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாட்டினை பங்காளிகளுடன் இணைந்து செய்வதற்கான கால நேரம் கூடி வரும்.


கல்வி : மாணவர்களைப் பொறுத்த வரை அயராது உழைக்க வேண்டியது அவசியமாகிறது. தேர்வு நேரத்தில் நிலவும் கிரஹங்களின் சஞ்சார நிலை எழுதும் திறனில் ஒரு சில பாதிப்புகளைத் தோற்றுவிக்கலாம். எழுதும் திறனில் இருந்து வரும் வேகம் குறையலாம் என்பதால் பாடங்களை அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். ஆயினும் சனியின் ஆட்சி பலம் காரணமாக சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று விரும்பிய உயர்கல்வி பாடப்பிரிவில் இடம் கிடைக்கக் காண்பீர்கள். மருத்துவம், மொழிப்பாடங்கள், ஆசிரியர் பயிற்சி, உடற்கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.


பெண்கள் : உங்களின் பொறுப்பான செயல்கள் குடும்பப் பெரியவர்களிடம் நற்பெயரைப் பெற்றுத் தரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருவீர்கள். அவர்களின் எதிர்கால நலனுக்காக சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்புகள் உருவாகும்.  அண்டை அயலார் வீட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு உங்களிடம் வந்து சேரலாம். உங்களின் செயல்வெற்றிக்கு வாழ்க்கைத்துணைவரின் ஆலோசனைகள் பயனுள்ள வகையில் அமையும். பலதரப்பட்ட நண்பர்களின் துணையுடன் சமூக சேவையில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும்.


உடல்நிலை: மூன்றாம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான் ஆட்சி பெறுவதால் உடல்நிலை குறித்து அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை. ஆயினும் எலும்பு மஜ்ஜைகள், மூட்டுக்கள் போன்ற பகுதிகளில் சிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரும் என்பதால் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவது நலம். பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் துணைபுரியும்.


தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். அதே நேரத்தில் பணிச்சுமை என்பதும் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களது நிர்வாகத்திறமை வெளிப்பட்டு மேலதிகாரிகளின் எண்ணங்களை நிறைவேற்றி நற்பெயர் அடைவீர்கள். உடன் பணி புரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். சுயதொழில் செய்து வருவோரில் குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர், ஆட்டோ மொபைல்ஸ் துறை, கட்டிடத் துறையில் கீழ்மட்ட தொழில் செய்வோர், பொன், வெள்ளி போன்ற ஆபரணத்தொழில் செய்பவர்கள், வங்கி, இன்ஷ்யூரன்ஸ் துறையினர் ஆகியோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். தொழில்முறையில் ஸ்திரத்தன்மை உண்டாகும்.
பரிகாரம் : பிரதோஷ வழிபாடு சிறப்பான பலனைத் தரும். பிரதோஷ நாட்களில் அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று உங்களால் இயன்ற கைங்கரியங்களைச் செய்து வாருங்கள்.

கேட்டை: ஏழரை சனியின் பிடியிலிருந்து விடுபட்டிருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சிறப்பான நற்பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. உங்கள் மனதில் இருந்து வரும் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் காலமாக இருக்கும் என்றால் அது மிகையாகாது. ராசிநாதன் செவ்வாயின் துணையினால் எடுத்த காரியத்தில் தொய்வின்றி சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருவீர்கள். போட்டியாளர்கள் மத்தியில் உங்களின் செயல்வேகம் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். எதிரிகள் காணாமல் போவார்கள். மனதினில் ஸ்திரத்தன்மை உருவாகும். உடல்நிலையிலும் சரி, மனநிலையிலும் சரி இதுநாள் வரை இருந்த வந்த மந்தத்தன்மை விலகி மனமகிழ்ச்சியோடு பணியாற்றி வருவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் நேரம் இது. நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களை நண்பர்களின் உதவியுடன் சாதித்துக் கொள்வீர்கள்.


நிதி : செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலைமை மிக நன்றாக இருந்து வரும். நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு சேமிப்பில் ஈடுபடுவீர்கள். 2021ம் வருடத்தின் பிற்பகுதியில் உங்களது பட்ஜெட்டையும் மீறி சற்று அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். குழந்தைகளின் திருமணம், வேலை, மேற்படிப்பு போன்ற சுபசெலவுகளாக இருக்குமே அன்றி அநாவசிய செலவுகள் ஏதும் இருக்காது.


குடும்பம் : உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் காண்பீர்கள். சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். விலகியிருந்த உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். நீங்கள் தாமரை இலைத் தண்ணீர் போல் நழுவிச்சென்றாலும் தாயார் வழி உறவுகள் உங்களை விடாது தொடருவார்கள். பிள்ளைகளின் வழியில் அதிக செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் அவர்களால் உண்டாகும் மனமகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் உங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தையும், அருமை பெருமைகளையும் தெரிந்து கொள்வீர்கள்.


கல்வி : மாணவர்கள் பயமின்றி தேர்வுகளை எழுதி முடிக்க கூடுதல் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தேர்வு நேரத்தில் கிரஹ நிலை சாதகமாக இருப்பதால் கூடுதல் வேகத்துடன் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. பொறியியல்துறை, ஆசிரியர் பயிற்சி, கணிப்பொறி அறிவியல் போன்ற துறையில் படித்து வரும் மாணவர்கள் ஏற்றம் காணுவார்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அவ்வப்போது ஒரு சில தடைகளை சந்தித்து வந்தாலும் 2021 நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் தடைகள் நீங்கப் பெற்று வெற்றி காண்பார்கள்.


பெண்கள் : அவ்வப்போது மனதினில் குழப்பங்களும், வீணான கற்பனைகளால் தேவையற்ற பயமும் இருந்து வரும். உங்கள் குடும்ப பிரச்னைகளை உறவினர்கள் மத்தியில் வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கும் உறவினர்களுக்கு சாதகமான வாய்ப்பாக உருவாகிவிடும். உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கொண்டே உங்களை எளிதில் வீழ்த்தி விடுவார்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருந்து வரவும்.

உடல்நிலை: உணவிற்காக செலவழிப்பதில் சிக்கனத்தைக் கடைபிடிப்பதாலும் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும் அவ்வப்போது உடல்நிலையில் அசதி தோன்றும். நரம்புத் தளர்ச்சி, கைகால் வலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றால் அதிகம் அவதிப்பட நேரிடும். கீரை வகைகளையும். புரோட்டீன் சத்து மிக்க பருப்பு வகைகளையும் ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது.


தொழில் : உத்யோக ரீதியாக பதவி உயர்வினைக் காணும் நீங்கள் சற்று கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். பணிச்சுமையும் கூடும். 2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு உதவியாளர்களின் உதவியோடு அலுவல் பணியினை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு உத்யோகத்திற்கு காத்திருப்பவர்களுக்கு 2021 மே மாதத்தின் பிற்பகுதியில் சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களும், உணவுப் பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் துறையைச் சேர்ந்தவர்களும் நல்ல நிலையினை அடைவார்கள். தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் துணையுடன் சிறப்பான சாதனைகளை படைப்பார்கள்.


பரிகாரம் : வீட்டினில் கங்கா பூஜை செய்து வழிபடுவது நல்லது. நேரம் கிடைக்கும்போது தீர்த்தயாத்திரை சென்று வாருங்கள். ஆங்காங்கே உள்ள புனித நதிகளில் நீராடுவதன் மூலமும் அங்கே செய்யும் தான தருமங்களின் மூலமும் சிறப்பான நற்பலன்களைக் காண்பீர்கள்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை) »
temple news
அசுவினி; அதிர்ஷ்ட நேரம் வந்தாச்சுஉங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் இதுவரை சஞ்சரித்த சனி ... மேலும்
 
temple news
கார்த்திகை; முயற்சி வெற்றியாகும்ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்; தொட்டதெல்லாம் வெற்றிசகோதர, தைரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
புனர்பூசம்;தொழிலில் முன்னேற்றம்தன, புத்திர, ஞானகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
மகம்; உடல்நலனில் கவனம் ஞான மோட்சக் காரகனான கேது பகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar