Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 மிதுனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 மிதுனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை)
ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
எழுத்தின் அளவு:
ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

பதிவு செய்த நாள்

11 டிச
2023
11:12

கார்த்திகை; முயற்சி வெற்றியாகும்

ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பூமிக்காரகனான செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு மனக்காரகனான சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திர நாதனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை முழுமையாக வழங்கிடக் கூடியவராகிறார்.

கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு சனி லாப ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி 11ம் வீட்டில் லாபம், யோகத்தை வழங்குபவராகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 10ம் வீட்டில் தொழில், உத்தியோகத்தில் உழைப்பை அதிகரித்திடக்கூடிய நிலையை உண்டாக்குபவராகவும் இருக்கிறார்.

அதிர்ஷ்ட காலம்
சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 -  ஜூன் 19, 2024 வரையிலும் மற்றும்  நவ.4, 2024 - பிப். 27, 2025 வரையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் யோகப்பலன் வழங்கிடுவார். தொழில், உத்தியோகத்தில் விருப்பம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். 2,3,4ம் பாதத்தினருக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். வழக்கமான செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4ம் பாதத்தினருக்கு ராகுவால் வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். ஏப்.26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் 1ம் பாதத்தினருக்கு ராகுவால் வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். முயற்சி வெற்றி பெறும்.  

குரு சஞ்சாரம்
ஏப்.30, 2024 வரை 1ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12ம் இடத்திலும்,  மே1, 2024 - மே 13, 2025 வரை முதல் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், மே 14, 2025 முதல் 1ம் பாதத்தினருக்கு 3ம் வீட்டிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும் குருபகவான் சஞ்சரிக்கிறார்.  1ம் பாதத்தினருக்கு 2024 மே முதல் ஓராண்டுக்கு பொருளாதார முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். முயற்சிகளில் வெற்றி வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 2025 முதல் யோகத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை வழங்குவார். சமூகத்தில் செல்வாக்கை உயர்த்துவார்.

பொதுப்பலன்
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்றத்தை அடைவீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் முயற்சி வெற்றியாகும். பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

தொழில்
கார்த்திகை முதல் பாதத்தினருக்கு லாபச் சனியாலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவாலும்  எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள்  வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இண்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் வணிகம், சினிமாத்துறையினர் வளர்ச்சி காண்பர். என்றாலும் முயற்சி அதிகமாக தேவைப்படும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

பணியாளர்கள்
கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு  மறைமுக எதிர்ப்பு உண்டாகும். வழக்கு, விசாரணை என்ற நிலையும் சிலருக்கு உண்டாகும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் சிரமம் குறையும்.

பெண்கள்
சுயதொழில் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

கல்வி
ஆசிரியர்களின் ஆலோசனை வெற்றிக்கு வழிவகுக்கும். பொதுத்தேர்வு எழுதுபவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்.

உடல்நிலை
நீண்ட நாளாக இருந்த நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடக்கூடிய அளவிற்கு உங்கள் உடல்நிலை அமைந்திருக்கும்.

குடும்பம்
திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.

பரிகாரம்
அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வு வளமாகும்.

ரோகிணி;தொழிலில் உயர்வீர்கள்


மனம் மற்றும் உடல் காரகன் எனப்படும் சந்திரன், களத்திர, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிர பகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு டிச. 20, 2023 முதல் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவான் எத்தகைய பலன்களை வழங்கப் போகிறார்?

உங்கள் ராசிநாதன் சுக்கிரனுக்கு சனிபகவான் நட்பிற்குரியவர் என்றாலும், ஒருவரின் கர்ம வினைக்கேற்ப நீதி தவறாமல் பலன் வழங்குபவர் சனி. அவர் 10 ம் வீடான ஜீவன ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் போது தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். தடைகள் விலகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் உருவாகும். செலவுகள் பல வகையிலும் ஏற்படும். வக்கிரம், அஸ்தமன காலத்தில் அவரால்  பாதிப்பு உண்டாகாது.

அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலமான டிச.20, 2023 - பிப்.15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025 மற்றும் நவ 17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும் தொழிலில் முன்னேற்றம். உத்தியோகத்தில் உயர்வு. வேலைத் தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு,  கவுரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயர்வு உண்டாகும். சனி பகவான் அஸ்தமனம், வக்கிரம் அடையும் காலங்களில் உடல்நிலையில் முன்னேற்றம், வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை என நிம்மதியான சூழ்நிலை உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில், ராகுவால் உங்கள் வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்ந்த பதவி அல்லது பொறுப்பு வந்து சேரும். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில், வேலைபளு அதிகரிக்கும். உத்தியோகம், தொழிலில் நெருக்கடிகள் உண்டாகும். உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உறவுகளிடம் பகை உண்டாகும் என்பதால் இக்காலத்தில் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் குருவின் பார்வைகளால் ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். செல்வாக்கு உயரும். மே1, 2024 - மே 13, 2025 ஜென்ம குரு காலத்தில் உயர்கல்வி பெறும் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். அந்தஸ்து, செல்வாக்கு உயரும். மே 14, 2025 முதல் 2ம் வீட்டில் சஞ்சரிக்கும் குருவால் பணத் தட்டுப்பாடு நீங்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும்.

பொதுப்பலன்
சனி பகவான் உங்கள் ஜீவன ஸ்தானாதிபதி என்பதால் இக்காலத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டியாளர்கள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உழைப்பால் உயர்வீர்கள். சமூகத்தில் மற்றவர்களால் மதித்திடக் கூடியவர்களாக உயர்வீர்கள்.

தொழில்
வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இயந்திரத் தொழிற்சாலை, மின்சார சாதனம் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், சினிமா, விவசாயம், குடிநீர் ஆகியவற்றில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். தொழிலில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பணியாளர்கள்
உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், கூடுதல் பொறுப்பு ஏற்படும். வழக்கு நடவடிக்கைகளுக்கு ஆளாகி பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பழைய வேலை கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும்.

பெண்கள்
சிலருக்கு அரசுவேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் முயற்சி நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சுயதொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பர். அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்பு, உழைப்பு அதிகரிக்கும்.

கல்வி
படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வதாலும், ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவதாலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். சிலருக்கு வெளிநாடு அல்லது வெளி மாநிலத்தில் கல்வி கற்கும் நிலை ஏற்படும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர் வெற்றி காண்பர்.

உடல்நிலை
உடல்நிலையில் பாதிப்பு தோன்றினாலும் மருத்துவத்தால் சரியாகும். அஜீரணம், அல்சர், வாயுத் தொல்லைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள் இயற்கை வைத்தியத்தால் குணம் காண்பர்.

குடும்பம்
தேவைக்கேற்ற பணவரவால் குடும்பத்தில் நெருக்கடிகள் காணாமல் போகும். குடும்பத்தினர்  ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து செயல்படுவர். சொத்து சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வேலைத்தேடுபவர்களுக்கு தகுதியான வேலை அமையும். தள்ளிப்போன திருமணம் இக்காலத்தில் நடைபெறும்.

பரிகாரம்; சனிக்கிழமைகளில் பெருமாள், சனீஸ்வரரை வழிபட சங்கடம் தீரும்.


மிருகசீரிடம்; தொட்டதெல்லாம் வெற்றி

சகோதர, தைரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திர நாதனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை கர்ம வினைக்கேற்ப வழங்கிடக் கூடியவராகிறார்.

மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு சனி ஜீவன ஸ்தானத்திலும் 3,4 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி 10ம் வீட்டிற்குரிய தொழில், உத்தியோகம் போன்றவற்றில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உழைப்பினையும், முயற்சிகளையும் அதிகரிப்பார். உங்களை வேகமாக செயல்பட வைப்பார். உழைப்பிற்கேற்ற லாபத்தை வழங்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அனைத்திலும் யோகத்தை அளிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார். எதிர்பார்த்த அனுகூலங்களை உண்டாக்குவார். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு அடைய வைப்பார். சங்கடங்களிலிருந்து முழுமையாக உங்களை விடுபட வைத்து முன்னேற்றம் அடைய வைப்பார். சமூகத்தில் உங்கள் நிலையை உயர வைப்பார். தொட்டதெல்லாம் வெற்றியென்ற நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16,2024 -  ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4,2024 - பிப் 27, 2025 வரையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்குவார். யோகத்தையும் போகத்தையும் அதிகரிப்பார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். வருவாயை அதிகரிப்பார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் அதற்கு முன்பிருந்த சங்கடங்களை அகற்றி வைப்பார். நினைத்ததை நினைத்தபடி முடிக்கும் நிலையை உருவாக்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில்  பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். திரைத் துறையினருக்கு எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பல வழிகளிலும் வரும். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு இழந்த சொத்து, செல்வாக்கை அடையும் நிலை உண்டாகும். நீண்டநாள் கனவு நிறைவேறும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும், மே 14, 2025 முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தன குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும் சஞ்சரிப்பார்.  3,4 ம் பாதத்தினருக்கு ஏப் 30, 2024 வரை அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்குவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 1,2 ம் பாதத்தினருக்கு மே 14, 2025 முதல் பண வரவை அதிகரிப்பார். உத்தியோகத்தில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம் தருவார். அந்தஸ்தையும் செல்வாக்கையும் அதிகரிப்பார்.

பொதுப்பலன்
திட்டமிட்டு செயல்பட்டு அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் இனி லாபத்தில் செல்லும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சிலர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதியுதவி செய்வீர்கள். ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தையின் ஆலோசனையை ஏற்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். கலைத்துறையினர் செல்வாக்குடன் திகழ்வர்.

தொழில்
மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ராகுவாலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்கிய சனியாலும் உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்பும் விரும்பிய இடத்திற்கு இட மாற்றமும் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோரின் விருப்பம் நிறைவேறும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ், ஆசிரியர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்வோர் வளர்ச்சி அடைவார்கள்.

பணியாளர்கள்
உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வுடன் பொறுப்பும் அதிகரிக்கும். மேலதிகாரிகள், முதலாளிகள் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள்
குடும்பத்தினரை அனுசரித்து விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு நல்ல முடிவு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு திறமைக்கேற்ப வேலை அமையும்.

கல்வி
பொதுத் தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது அவசியம். விளையாட்டு போக்கை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு.

உடல்நிலை
உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். விபத்தால் நீண்டநாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் தோன்றும். பரம்பரை நோய், தொற்று நோய் இருந்து விடுதலை பெறுவீர்கள்.

குடும்பம்
வருமானம் அதிகரிக்கும் என்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். பழைய கடன் அடைபடும். நினைத்ததை முடித்து ஆதாயம் அடைவீர்கள். காரியத்தடை நீங்கும். தொட்டது பொன்னாகும்.  சிலருக்கு புதிய வீடு, வாகனம் அமையும்.

பரிகாரம்; துர்க்கை, விநாயகர் வழிபாடு உங்கள் வாழ்வை வளமாக்கும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை) »
temple news
அசுவினி; அதிர்ஷ்ட நேரம் வந்தாச்சுஉங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் இதுவரை சஞ்சரித்த சனி ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்; தொட்டதெல்லாம் வெற்றிசகோதர, தைரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
புனர்பூசம்;தொழிலில் முன்னேற்றம்தன, புத்திர, ஞானகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
மகம்; உடல்நலனில் கவனம் ஞான மோட்சக் காரகனான கேது பகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
உத்திரம்; நல்ல நேரம் வந்தாச்சுஆத்மகாரகன் என்று கூறப்படும் சூரியபகவான் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar