Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
தனுசு : பணவரவு கூடும் தனுசு : பணவரவு கூடும் கும்பம் : நிதானம் தேவை கும்பம் : நிதானம் தேவை
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (27.12.2020 முதல் 20.12.2023 வரை)
மகரம்: சங்கடம் தீரும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2020
17:31

உத்திராடம் 2, 3, 4ம் பாதம் : ஏழரை நாட்டுச் சனியின் காலத்தில் ஜென்மச் சனியின் பிரிவிற்குள் நுழைய உள்ளீர்கள். இதுநாள் வரை உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனி பகவான் தற்போது உங்களின் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளார். கடந்த மூன்று ஆண்டு காலமாக விரயச்சனியாக பலவிதமான சிரமங்களையும், குழப்பங்களையும் சந்தித்து வந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சற்று ஆறுதலைத் தரும் வகையில் அமையும். பொதுவாக ஜென்மச் சனிக்குரிய பலனாக மனக்குழப்பம் தோன்றும் என்று சொல்லப்பட்டாலும் சனி பகவானையே ராசிநாதனாகக் கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்கள் கவலைப்படத் தேவையில்லை. பூர்வீகத்தை விட்டு இடம் பெயர்ந்து வந்தவர்கள் மீண்டும் தங்கள் பூர்வீகத்திற்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

நிதி : வாழ்க்கைத்துணையின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் உருமாறக்கூடும். பூர்வீக சொத்துக்களில் ஒருசிலவற்றை விற்று வேறு புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். செலவுகள் குறைவதால் சேமிப்பில் உயர்வு காண்பீர்கள். சிக்கன முயற்சிகள் வெற்றி பெறும். பொதுவாக வரும் மூன்று வருட காலத்திற்குள்ளாக தனாதிபதி சனியினால் ஏதோ ஒரு வகையில் சொத்துக்களைச் சேர்ப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.


குடும்பம் : உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. உறவினர்களால் உண்டாகும் கலகம் குடும்பத்தில் ஒரு சில பிரச்னைகளைத் தோற்றுவிக்கலாம். வீண் வதந்திகளை நம்பாது எதையும் தீர விசாரித்து அறிந்த பின்னரே செயலில் இறங்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். பிள்ளைகளின் வழியில் கவுரவம் உயரக் காண்பீர்கள். பிள்ளைகள் உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்படுவார்கள்.


கல்வி : மாணவர்களைப் பொறுத்த வரை அவ்வப்போது ஞாபக மறதித் தொந்தரவிற்கு ஆளாவார்கள். அன்றாடப் பாடங்களை அன்றன்றே எழுதிப் பார்ப்பது நல்லது. அயராது உழைத்தால் மட்டுமே நினைத்த வெற்றியைத் தேர்வினில் அடைய முடியும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவது நன்மை தரும். இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், கேட்டரிங் டெக்னாலஜி, பேஷன் டிசைனிங் பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : தம்பதியராக இணைந்து செயல்களில் சிறப்பான வெற்றி காண்பீர்கள். கணவர் துவளுகின்ற நேரத்தில் நீங்கள் தூண்டுகோலாய் இருந்து செயல்பட வேண்டியிருக்கும். அவரது உடல்நிலையிலும் அவ்வப்போது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சுய உதவிக்குழுவில் இருக்கும் பெண்கள் தங்கள் முயற்சியில் சாதிப்பார்கள். குடும்பத்தினர் தங்கள் தேவைகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பர்.


உடல்நிலை : உடல்நிலையில் அவ்வப்போது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நேரத்திற்கு உணவருந்த இயலாமல் போகலாம். இதனால் அவ்வப்போது வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். உஷ்ணத்தால் உண்டாகும் பிரச்னைகளால் சற்று அவதிப்படுவீர்கள். மற்றபடி சனியின் துணையால் நெடுநாள் வியாதிகள் குணமடையும்.

தொழில் : ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் இடத்தின் மீது சனி பகவானின் பார்வை விழுவதால் தொழில்முறையில் ஸ்திரத்தன்மையைக் காண்பீர்கள். தொழில்முறை எதிரிகள் காணாமல் போவார்கள். உத்யோகஸ்தர்களில் கீழ்நிலைப் பணியாளர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். உயரதிகாரிகளாக பணியாற்றுபவர்கள் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஷேர்மார்க்கெட், புரோக்கர் தொழில், கமிஷன், தரகு, ஏஜன்சி தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். சிறுதொழில் செய்வோர் ஓய்வில்லாமல் தொடர்ந்து உழைக்க வேண்டியிருக்கும். புஞ்சை பயிர் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.


பரிகாரம் : சனி தோறும் காக்கைக்கு உணவு படைப்பதை வழக்கத்தில் கொள்ளுங்கள். சனி பகவானுக்கு எள் முடிச்சிட்ட விளக்கேற்றி வழிபடுவதும் நல்லது. ஸ்ரீநிவாஸப் பெருமாளை வணங்குங்கள்.

திருவோணம் : ராசி அதிபதி ஆகிய சனி பகவான் ஜென்ம ராசியில் அமர்வது நன்மையே செய்யும். அவரே தன ஸ்தான அதிபதியும் ஆவதால் புதிய சொத்துக்கள் சேரும். அதிலும் ஜனன ஜாதகத்தில் சனியின் பலத்தினைப் பெற்றவர்களுக்கு ஜென்மச்சனியைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. மனதில் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை அதிகரிக்கும். நீங்கள் நினைக்கும் காரியங்களை எளிதில் நடத்தி முடிக்கும் சாதகமான அம்சத்தை காண உள்ளீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் இரு கண்களாக இருந்து உங்கள் செயல்களில் வெற்றியை பெற்றுத் தரும். குடியிருக்கும் வீட்டினில் மாறுதல் செய்ய முற்படுவீர்கள். பூர்வீக ஸ்தானத்தை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இவ்வருடத்தில் தனது சொந்த ஊரைச் சென்றடைவார்கள்.


நிதி : சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். தன ஸ்தானத்திற்கும் அதிபதி சனி என்பதால் சம்பாத்யத்தினை உயர்த்தித் தருவார். அதே நேரத்தில் வரவிற்கேற்ற செலவுகளும் வரிசையில் காத்து நிற்கும். சொகுசான வாழ்விற்காக ஆடம்பர செலவுகளில் அதிக நாட்டம் செல்லும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புண்டு. அரசுத் தரப்பிலிருந்து வர வேண்டிய உதவித் தொகைகள் வந்து சேரும். தங்கம், வெள்ளிப் பொருட்கள் சேரும்.


குடும்பம் : குடும்பத்தில் சலசலப்பான நிலை தொடர்ந்து இருந்து வரும். அடுத்தவர்களின் விமர்சனங்களைப் பற்றி கவலை கொள்ளாது தன் நிலையில் உறுதியாக இருந்து வருவீர்கள். இதனால் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் தோன்றக்கூடும். பிள்ளைகளின் வாழ்வினில் உங்களின் தனி முயற்சியினால் புதிய திருப்புமுனை உண்டாகும். 2021 ல் குருபகவானின் இணைவைப் பெற்றிருக்கும் நீங்கள் செய்ய நினைக்கும் சுபகாரியங்களை தள்ளிப்போடாது இந்த வருடத்திலேயே செய்து முடித்துக் கொள்வது நல்லது.


கல்வி : பள்ளிப்பாடம் தவிர இசை, நடனம், ஓவியம் போன்ற தனித்திறமைகள் பெற்றிருப்போர் தகுந்த அங்கீகாரத்தினை அடைவார்கள். தேர்வு நேரத்தில் ஞாபக மறதித் தொந்தரவால் சற்று அவதிப்பட நேரிடலாம். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். காமர்ஸ், எகனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்சி, கணிதம், மொழிப்பிரிவு பாடங்கள் ஆகியத் துறைகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.


பெண்கள் : அதிகம் பேசாமல் அளவோடு பேசி வருவது நல்லது. நாம் பேசும் பேச்சுக்களில் வெளிப்படும் கருத்துக்கள் நல்லவர்கள் மத்தியில் பாராட்டினைப் பெறும். அதே நேரத்தில் ஒரு சிலரின் பொறாமையால் வீண்பழி சுமக்க வேண்டியதற்குமான வாய்ப்புகள் உள்ளது. அண்டை, அயலார் வீட்டுப் பெண்களுடன் ஒரு வரைமுறைக்குள் பழக வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்தையும் கணவரின் ஆலோசனையின் பேரில் செய்து வருவது நல்லது.


உடல்நிலை : அவ்வப்போது உடல்நிலையில் அசதியான சூழ்நிலை தோன்றும் வாய்ப்பு உண்டு. மற்றபடி உடல்நிலையில் பெருத்த சிரமம் ஏதும் இராது. இரும்புச்சத்து மிக்க காய்கறிகள், கீரை வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும். பெற்றோருக்கான மருத்துவ செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உண்டென்பதால் அவர்களது உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.


தொழில் : கடைநிலைப் பணியாளர்கள், தொழிலாளர் வர்க்கத்தினர் போன்றோர் முன்னேற்றம் காண்பார்கள். தொழில்முறையில் உங்களது முழுமுயற்சியால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். அயல்நாட்டு சம்பந்தமுடைய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, இரும்பு, கம்பி, பழைய சாமான்கள் வியாபாரம்,  சிமெண்ட் போன்ற தொழில்களில் உள்ளோர் முன்னேற்றம் காண்பார்கள். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள், முடிதிருத்தும் கலைஞர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் முக்கியமான இடத்தினைப் பிடிப்பார்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வின் பேரில் இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும்.
பரிகாரம் : மாதந்தோறும் வருகின்ற திருவோண நட்சத்திர நாளில் விரதம் இருந்து வாருங்கள். மகாலட்சுமி வழிபாடு செல்வ வளத்தைப் பெற்றுத் தரும்.

அவிட்டம் 1, 2ம் பாதம் : ஜென்ம ராசியில் சனி பகவான் வந்து அமர்ந்தாலும் அவரே தன ஸ்தானாதிபதி ஆகி ஆட்சி பலம் பெறுவதால் நற்பலன்களையே தோற்றுவிப்பார். மனதில் ஒருவித ஸ்திரத்தன்மை உருவாகும். யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாது தைரியத்துடன் மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை தயங்காது செய்து வருவீர்கள். இந்நிலை அடுத்தவர்களின் கண்களுக்கு உங்களின் பிடிவாத குணமாகத் தோன்றும். ஒரு சில விஷயங்கள் தோல்வி உண்டாகும் என்று தெரிந்தே தைரியத்துடன் இறங்கி வெற்றி காண முயற்சிப்பீர்கள். தெளிவான கருத்துக்கள் மனதில் உதிக்கும். உங்கள் ஆலோசனைகளை அடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட அதனை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் கருமமே கண்ணாக இருந்து வருவீர்கள். அதிகாரமான வார்த்தைகள் உங்கள் கவுரவத்தினைக் காக்கும்.


நிதி : பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து வரும். அதே நேரத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பாராத பல வழிகளிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும் அதே நேரத்தில் புதிதாக கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் சேரும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும்.


குடும்பம் : சதா சம்பாத்யத்தைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் குடும்பத்தினரின் நலனிலும் சிறிது அக்கறை கொள்ள வேண்டும். ஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவழித்தீர்களேயானால் குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பினைப் போக்கி சந்தோஷத்தை வரவழைக்கலாம். உடன்பிறந்தோருக்காக உதவி செய்ய நேரிடும். உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரியின் பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் வாழ்வினில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.


கல்வி : மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். சரியான முறையில் தேர்விற்கு தயார் செய்து கொண்டீர்களேயானால் எதிர்பார்க்கும் கேள்விகளை வினாத்தாளில் காணப்பெற்று விடையளிக்கலாம். தேர்வு நேரத்தில் கிரக நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். மருத்துவம்,  மருத்துவம் சார்ந்த மற்ற மாணவர்களும் ஏற்றம் காண்பார்கள்.


பெண்கள் : நாவடக்கம் அவசியம் தேவை. நான்குபேர் மத்தியில் நீங்கள் அவசரப்பட்டு பேசும் வார்த்தைகள் உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கக்கூடும். நீங்கள் பேச நினைப்பவற்றை கணவரின் வாயிலாக வெளிப்படுத்தி காரியத்தினை சாதித்துக் கொள்ளலாம். பிறந்த வீட்டாருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதுநாள் வரை புத்திர பாக்யம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த பெண்கள் குழந்தைப்பேறு அடைவார்கள்.


உடல்நலம்: அளவுக்கதிகமான டென்ஷனும், எதற்கெடுத்தாலும் அவசரப்படுவதாலும் உடல்நிலையில் பாதிப்புகள் தோன்றக்கூடும். எலும்பு முறிவு அல்லது எலும்பு மஜ்ஜை பிரச்னை, மூட்டுகளில் தொந்தரவு ஆகியவற்றால் அவதிப்பட நேரிடும். வண்டி, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது அதிக எச்சரிக்கை தேவை.


தொழில் : தொழில் நிலை தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வரும். நீங்களாக விரும்பினால் ஒழிய ஓய்வு எடுத்துக்கொள்ள இயலாது. உழைப்பிற்கேற்ற ஊதியமும் நல்ல லாபமும் தொடர்ந்து இருந்து வரும். உத்யோகஸ்தர்கள் உடனுக்குடன் சுறுசுறுப்பாக செயல்படுவதன் காரணமாக  முக்கியமான வேலைகள் மீண்டும் மீண்டும் உங்களிடமே ஒப்படைக்கப்படுகின்ற நிலைக்கு ஆளாவீர்கள். அதே நேரத்தில் மேலதிகாரிகளுடன் மோதல் போக்கு உருவாகக் கூடும். ஒரு சிலர் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். அரசியல்வாதிகள், நகை அடகு வட்டிக்கடை நடத்துபவர்கள், மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு பொற்காலமாக இருக்கும்.


பரிகாரம் : விஷ்ணு துர்கையை வழிபட்டு வாருங்கள். எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்து தானம் செய்வதும் நன்மை தரும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (27.12.2020 முதல் 20.12.2023 வரை) »
temple
அஸ்வனி : பொது : இதுநாள் வரை பாக்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டில் சனியைக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4ம் பாதங்கள் : பொது : ‘அஷ்டமத்துச் சனி’எனும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு ... மேலும்
 
temple
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள் : பொது : ‘கண்டச் சனி’ எனும் நிலையிலிருந்து வெளியேறி ‘அஷ்டமத்துச் சனி’ எனும் ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம் : பொது : கடக ராசிக்கு ஏழாம் இடமாகிய மகர ராசிக்குள் இடம் பெயர்ந்து உங்களை கண்டச்சனி ... மேலும்
 
temple
மகம் : பொது : இதுவரை ஐந்தாம் இடத்தில் வசித்து வந்த சனி பகவான் தற்போது ஆறாம் வீட்டிற்கு இடம் பெயர உள்ளதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.