திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா: கவர்னருக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2020 12:12
புதுச்சேரி: சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருகை தருமாறு, கவர்னர் கிரண்பேடிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.காரைக்கால் மாவட்டம், திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு, இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும், சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு சனிப்பெயர்ச்சி விழா, வரும் 27 ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, தருமபுர ஆதினம் கட்டளை தம்பிரான் கந்தசாமி சுவாமிகள், காரைக்கால் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆகியோர் நேற்று, கவர்னர் கிரண்பேடியை சந்தித்து, சனிப்பெயர்ச்சி விழா பத்திரிகை அளித்து, விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.