பதிவு செய்த நாள்
17
டிச
2020
12:12
அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு, ஒவ்வொரு துறையும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அரசின் சேவையை இணையதளம் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக, முக்கிய கோயில்களில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் வசதி உள்ளது. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஆன்லைனில் பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யலாம்.
இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், அதன் வரலாறு, சிறப்புகள் ஆகிய விவரங்களை இணையதளம் மூலம் பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடுகளை துவக்கி உள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,327 கோயில்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணி மும்முரமாக நடக்கிறது. அதன் மூலம் ஒரு கோயிலின் வரலாறு, அங்கு நடைபெறும் திருவிழாக்கள், நடைதிறக்கும் நேரம், கோயிலுக்கு செல்ல வழிகாட்டி, அன்னதானம், கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள், கோயில் புகைப்படம், வழிபாட்டு முறைகளை அறியலாம். இதற்கான பணியில் செயல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கோயில்கள் பற்றி விவரங்களை www.tnhrce.gov.in ல் அறியலாம்.