விழுப்புரம்: விழுப்புரம் ஜனகவள்ளி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், மார்கழி மாத முதல் நாளையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.நிகழ்ச்சியையொட்டி, அதிகாலை 6:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இதை தொடர்ந்து, ஆண்டாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை முடிந்து, முத்தங்கி சேவை சாதிக்கப்பட்டது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.