பதிவு செய்த நாள்
18
டிச
2020
01:12
திருவள்ளூர் - திருத்தணி முருகன் கோவிலில், டிச. 31 அன்று, நள்ளிரவு நடைபெறும், புத்தாண்டு தரிசனத்தினை, மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவிலில், கோவிட் - -19 பெருந்தொற்று பரவல் காரணமாக, திருப்படி திருவிழா, வரும், 31; ஜன., 1 ஆகிய நாட்களில், காலை, 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.நள்ளிரவு, 12:00 மணி தரிசனம், பஜனை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.அன்று, மாலை, 5:00 மணி முதல், இரவு, 8.00; ஜன.,,1, காலை, 8:00 மணி முதல், பகல், 11:00 மணி வரையிலும், உற்சவ மூர்த்தியினை தரிசனம் செய்ய, யு - டியூப் மூலம், நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு சிறப்பு வழி தரிசனம், 200 ரூபாய் கட்டணத்தில், 200 நபர்; இலவச பொது தரிசன வழியில், 200 நபர் வீதம், நாள் ஒன்றுக்கு, 4,800 பக்தர்கள், www.tnhre.gov.in என்ற, இணையதள வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.நேரடியாக வருகை தரும் பக்தர்களுக்கு அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, பொது மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். படி பூஜை துவக்கம் சிறிய அளவில் நடத்தப்படும்.திருவேற்காடு கோவில்திருவேற்காடு, கருமாரியம்மன் கோவிலில், டிச.,31, இரவு, 8:00 மணிக்கு நடை சாற்றப்பட்டு, ஜன.,1, காலை, 6:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தை மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டோர், தரிசனம் செய்ய அனுமதி இல்லை. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கக் கூடாது.பக்தர்கள் அர்ச்சனை பொருள் கொண்டு வர அனுமதியில்லை. அனைவரும் முக கவசம் அணிந்து வருவது அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.