ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பகல் பத்து நான்காம் நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2020 12:12
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று (18ம் தேதி) பகல் பத்து நான்காம் நாளில், ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டை , வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அவுரிசரம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.