பதிவு செய்த நாள்
23
டிச
2020
04:12
சென்னை : அடையாறு, ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில், 25ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அடையாறு, ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில், 25ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. அன்று காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.அதிகாலை, 3:15 மணிக்கு, ஸ்ரீ மூலவர் மற்றும் உற்சவர் அபிஷேகம்; காலை, 5:00 மணிக்கு, 336 மகர விளக்கு தீபாராதனை; காலை, 5:45 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, காஞ்சி மகா சுவாமி மண்டபத்தில் காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, கருட வாகனம் தரிசனம் செய்யலாம். சிறப்பு தரிசனத்திற்கு, 100 மற்றும் -250 ரூபாய்; நுழைவாயில், 250 ரூபாய் கட்டணம். முன்பதிவுக்கு, www.ananthapadmanbhaswamy temple.org என்ற இணையதளத்தில், 24ம் தேதிக்குள், பதிவு செய்துக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2441 2529 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.