கும்பகோணத்தில் சத்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகளின் 14வது குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2020 04:12
தஞ்சாவூர், கும்பகோணத்தில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தர் சுவாமிகளின் 14வது குருபூஜையை முன்னிட்டு இன்று 7 ஆயிரம் பேருக்கு "சாலை விருந்து" வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சீனிவாசநல்லுாரில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தர் சுவாமிகள் அவதரித்தார். இங்கே அவரின் நுாற்றாண்டு நினைவு நுழைவுவாயில் உள்ளது. இந்த நுழைவு வாயில் அருகே ஆண்டு தோறும் டிச.23ம் தேதி குருபூஜையை முன்னிட்டு சாலை விருந்து நடைபெறுவது வழக்கம். அதன்படி ஓம் ஸ்ரீ சித்தர் சுவாமிகளின் குரு பூஜையை முன்னிட்டு 14வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி சத்குரு ஸ்ரீ சித்தர் சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள், நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாலை விருந்து தொடக்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில் மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், திருவிடைமருதுார் எம்.எல்., செழியன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை விருந்தை தொடங்கி வைத்தனர். இதில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை, 7 ஆயிரம் பேருக்கு, சுமார் ஆயிரம் கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை கொண்டு சமையல் செய்து பொது சாலை விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஓங்கார ஆசிரமம் சாலை விருந்து குழு தலைவர் உலகேஸ்வரி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.