வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பல்கலையில், ஜெயின் மதம் மற்றும் ஹிந்து தர்மம் குறித்த இருக்கை உருவாக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், பிரெஸ்னோவில் உள்ளது, கலிபோர்னியா மாகாண பல்கலை. இங்கு,ஜெயின் மதம் மற்றும் ஹிந்து தர்மம் குறித்த இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த, இந்தியாவை பூர்வீகமாக உடைய சிலர் இணைந்து, நன்கொடை அளித்து, இந்த இருக்கையை உருவாக்கியுள்ளனர். ஹிந்து மற்றும் ஜெயின் மதத்தின் சிறப்புகள் குறித்து, தற்கால மற்றும் எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், இந்த இருக்கையை உருவாக்கியுள்ளதாக, நன்கொடையாளர்கள் தெரிவித்துள்ளனர்.