பதிவு செய்த நாள்
24
டிச
2020
08:12
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் உள்ள அருள்மிகு பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைகுண்ட ஏகாதசி விழா நாளை காலை, 5.30 மணிக்கு பாலமலை அரங்கநாதர் கோவில் வளாகத்தில் நடக்கிறது. செங்கோதை அம்மன், பூங்கோதை அம்மன் சமேத பாலமலை ரங்கநாதர் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளுகிறார். தொடர்ந்து, செல்வன் பந்தல், பாலமலை வடக்குப்பகுதி அன்னதான கமிட்டி பந்தல், நாயக்கன்பாளையம் அன்னதான கமிட்டி பந்தல், பாலமலை ஆதிவாசி கிருஷ்ணலீலை பஜனை குழு பந்தல், பாலமலை காளிதாஸ் குருபூஜை அன்னதான பந்தல், கூடலூர் கவுண்டம்பாளையம் பாலமலை அன்னதான கமிட்டி பந்தல், கருட வாகன உற்சவ பந்தல், கோவனூர் செங்கோதை அம்மன் பந்தல், பரிவேட்டை மண்டப பந்தல், குரு ஸ்ரீ கிருஷ்ணா நந்தஜி சேவா சங்கம் பந்தல்களில் ரங்கநாதர் எழுந்தருளி காட்சி தருகிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது. அரசு சிறப்பு பேருந்துகள் பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை கோயில் வரை இயங்குகிறது. இதேபோல பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், தமிழக அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.