நரசிங்கப்பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் நாளை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2020 06:12
ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இங்கு அதிகாலை 4:30 மணி முதல் 5:30 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து கோயிலின் வடக்குப்பக்கம் உள்ள சொர்க்கவாசல் வழியாக சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றவும், கட்டாயம் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.