பதிவு செய்த நாள்
24
டிச
2020
06:12
தஞ்சாவூர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், 13 லட்சம் ரூபாயும்,363 கிராம் தங்கமும் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தஞ்சையை அடுத்த புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். பக்தர்கள் செலுத்திய காணிக்கை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்தது. உதவி கமிஷனர் (நகை சரிபார்ப்பு) வில்வமூர்த்தி, அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் கிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில், கோவில் பணியாளர்கள் முன்னிலையில் வங்கி அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 745 ரொக்கமாகவும், 363 கிராம் தங்கமும், 435 கிராம் வெள்ளியும் கிடைத்தன.