காரைக்கால் அம்மையார் கோவிலில் தர்மபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2020 03:12
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் தருமபுரம் ஆதினம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் அம்மையார் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் 63 நாயன் மார்களில் ஒருவர் அம்மையார் திகழ்ந்து வருகிறார்.இதனால் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று திருக்கயிலாய பரம்பரை திருத்தருமபுரம் ஆதின 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அம்மையார் கோவிலுக்கு வருகை புரிந்தார்.இவரை கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன்.செயலாளர் பக்கிரிசாமி.பொருளாளர் ரஞ்சன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.பின் சிவாச்சாரியார்கள் பூர்ணகும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.பின் அம்மையார் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்தார். பின் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டு அனைத்தையும் பார்வையிட்டார். மேலும் தர்மபுரம் பகுதியில் உள்ள யாழ்மூரிநாதர் கோவில் மற்றும் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு இன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு தருமை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை புரிகின்றனர். பின்னர் அவரை கோவில் நிர்வாகம் சார்பில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பின் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு தர்பாரண்யேஸ்வரர். விநாயகர். முருகர்.அம்பாள் மற்றும் சனீஸ்வர பகவான் வழிபட்டார்.