பதிவு செய்த நாள்
26
டிச
2020
04:12
விழுப்புரம்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் விழுப்புரம் மாவட்டம் சார்பில், பக்தர்கள் இருமுடி ஏந்தி சென்றனர்.விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், கடந்த 11ம் தேதி முதல் சக்தி மாலை அணிந்து, இருமுடி ஏந்தி ஏழு தினங்கள் விரதமிருந்தனர்.
இதையடுத்து, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக, நேற்று, விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து 540 பேர் புறப்பட்டனர்.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமையில், பக்தர்கள் இருமுடி ஏந்தி புறப்பட்டனர். முன்னதாக, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதில், ஆன்மிக இயக்க மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ரத்தினசிகாமணி, நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, சண்முகம், வசுந்தராதேவி, மகாலிங்கம், மணிகண்டன், மோகனகிருஷ்ணன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து தற்போது வரை 20 ஆயிரம் பக்தர்கள் இருமுடி ஏந்தி சென்றதாக, தலைவர் ஜெயபாலன் தெரிவித்தார்.