பதிவு செய்த நாள்
27
டிச
2020
07:12
ஜெய்பூர்:ஒடிசாவில், பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள புரி ஜெகன்னாதர் கோவில், புத்தாண்டு தினத்தில் மீண்டும் மூடப்படும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமை யிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் கோவில், கொரோனா ஊரடங்கால் பூட்டப் பட்ட பின், கடந்த, 23ம் தேதி திறக்கப்பட்டது. கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து புரியில் வசிப்போர் மட்டும், பாதுகாப்பு வழிமுறைகளுடன் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், ஜன., 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், கோவிலை மீண்டும் மூடவுள்ளதாகவும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.