பதிவு செய்த நாள்
01
ஜன
2021
04:01
உடுமலை: உடுமலை, சீனிவாச பெருமாள் கோவிலில், ராப்பத்து உற்சவம் சிறப்பு பூஜை நடக்கிறது.உடுமலை பெரியகடை வீதியில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, பகல்பத்து மற்றும் ராபத்து உற்சவம் நடக்கிறது. பகல்பத்து உற்சவம் டிச., 15ம்தேதி துவங்கி, 24ம்தேதி வரை நடந்தது. வைகுண்ட வாசல் திறக்கும் நிகழ்வை தொடர்ந்து, ராப்பத்து உற்சவம், 26ம் தேதி முதல் ஜன., 4ம் தேதி வரை நடக்கிறது.நாள்தோறும், மாலை, 6:00 மணி முதல் 8:00 மணி வரை திருவாய்மொழி, திருவந்தாதி, சிறிய திருமடல், பெரிய திருமடல் பாசுரங்கள் சேவை நடக்கிறது. நேற்று, ராப்பத்து உற்சவத்தையொட்டி, பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள், அபிேஷக ஆராதனையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஜன., 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருவாய்மொழி திருநாள் சாற்றுமறை சிறப்பு பூஜை நடக்கிறது.