கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தாயார் உற்சவம் நேற்று துவங்கியது.கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களுக்கு பின் புண்டரீகவல்லி தாயாருக்கு 10 நாள் உற்சவம் நேற்று துவங்கியது. தாயார் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது.வரும் 16-ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருப்பள்ளி கண்ணாடியறை சேவை வழிபாடும், 17-ம் தேதி காலை 5:30 மணிக்கு சுவாமிகளின் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.