சிறப்பு அலங்காரத்தில் காரமடை ரங்கநாதர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2021 11:01
காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில் மார்கழி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.