பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் ஐயப்பன் கோயில்களில் தை மாத மகரவிளக்கு தரிசன விழா நடந்தது.தரைப்பாலம் அருகில்உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மாலை 6:45 மணிக்கு மகரவிளக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.எமனேஸ்வரம் வண்டியூரில் அமைந்திருக்கும் ஐயப்பன் கோயிலில் 15ம் ஆண்டு மகரஜோதி விழா நடந்தது. அன்று காலை 9:00 மணி முதல் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.மாலை 6:40 மணிக்கு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்ஸவர் சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்தார். ஏராளமான பக்தர்கள் சரண கோஷம் முழங்க மகர ஜோதி தரிசனத்தில் கலந்து கொண்டனர். ஐந்துமுனை பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலிலும் மகரஜோதி தரிசன சிறப்பு தீபாராதனை நடந்தது.