கைலாயத்தையும், காசியையும் ஒரு சேர தரிசித்த புண்ணியத்தை வழங்கும் பெருமங்களம் கைலாசநாதர் கோயில், திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் அருகில் உள்ளது. இங்குள்ள அம்பாள் விசாலாட்சி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள். கவுதம மகரிஷி தவம் செய்து சிவபார்வதி தரிசனம் பெற்றதாகவும், இங்குள்ள குளத்தில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும் என்றும் தல வரலாறு கூறுகிறது. விநாயகர், நந்திக்கும் சிலைகள் இங்குண்டு. தற்போது சிதிலமடைந்து இருக்கும் இக்கோயிலில் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. போன்: 98400 53289, 99400 53289.