பதிவு செய்த நாள்
04
பிப்
2021
05:02
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம், சுப்பு நகரில் உள்ள புஷ்ப விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோவில் ராஜகோபுரம் மற்றும் புஷ்ப விநாயகர், நவசக்தி துர்கா தேவி, வள்ளி தேவசேன சமேத சிவசுப்ரமணியர், தட்சணாமூர்த்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, கடந்த 1ம் தேதி யாகசாலை பூஜை கள் துவங்கின. நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை யைத் தொடர்ந்து, கடம் புறப்பாடாகி 10:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் ராஜமாணிக்கம், செ யலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் பாஸ்கரன், இணைச் செயலாளர் கலியமூர்த்தி, நிதி கட்டுப்பாட்டாளர் ராமலிங்கம், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, சங்கர், ராமதாஸ், ஜெகதீசன், சிவாச்சாரியார்கள், பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவர் சரவணன், ரியல் எஸ்டேட் அதிபர் சக்திவேல், அறுபடை ரியல் ஏஜன்சி பொறியாளர் ராம்குமார், வழக்கறிஞர் சிவமணி, முகுந்தன், ஸ்ரீமுருகன் ரியல் எஸ்டேட் ரமேஷ் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.