சிதம்பரம் - அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ரா சார்பில் சிதம்பரத்தில் நிதி சேகரிப்பு பணி துவங்கியது.மேலவீதி கோதண்டராமர் சன்னதியில் நடந்த நிகழ்ச்சியை ரங்காச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்தார்.ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ரா கமிட்டி உறுப்பினர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகள் மற்றும் புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, குமராட்சி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் கமிட்டி உறுப்பினர்கள் மக்களை சந்தித்து நிதி சேகரித்து வருகின்றனர். இப்பணி வரும் 31ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் வரை தினமும் நடைபெறும்.