பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனுாரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா நேற்று துவங்கியது.
நேற்று காலை, 9.00 மணிக்கு கொடியேற்றுத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, லட்சுமி நரசிங்க பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் எழுந்தருளி, ஊர்வலமாக வந்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிம்ம வாகனம் மற்றும் ஹம்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.