ராமேஸ்வரம் கோயிலில் கங்கை நீருக்கு தடை: பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2021 01:02
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கங்கை நீர் அபிேஷகம், தேங்காய் உடைக்க தடை நீடிப்பதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு தளர்வால் செப்.,1ல் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பிப்.,2 முதல் பக்தர்கள் நீராட அனுமதி கிடைத்தது. தினமும் 4 ஆயிரத்துக்கு மேலான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.பொதுவாக சுவாமி தரிசனத்திற்கு தமிழக பக்தர்கள் தேங்காய், பழம், பூவுடனும் வடமாநில பக்தர்கள் செம்பு, சிறிய கலசத்தில் புனித கங்கை நீர் எடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது தேங்காய், பழம் மற்றும் கங்கை நீருடன் வரும் பக்தர்களை கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்தி திரும்ப அனுப்புகிறது. தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் அனைத்து வழிபாடு முறையும் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இங்கும் தடை நீடிப்பது வேதனையளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஹிந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலர் சரவணன் கூறுகையில், கோயிலில் தேங்காய் உடைத்து தரிசிக்க அனுமதிக்காமல், பக்தர்களை திருப்பி அனுப்புவது கண்டனத்திற்குரியது.இத்தடையை நீக்காவிடில் பக்தர்களை திரட்டி, பூஜை பொருட்களுடன் கோயிலுக்குள் சென்று தரிசிப்போம் என்றார்.