மதுரை : மதுரை ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது.
இதையொட்டி மங்களஆரதி, வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம், சிறப்பு பூஜை நடந்தது. மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பேசுகையில், சுவாமி விவேகானந்தர் உயர்ந்த மனிதர்களை உருவாக்குவதையே தன்னுடைய தலையாய பணியாக கருதினார். அதை அவர் தம் குறுகிய வாழ்நாளில் இயன்ற வரை செய்யவும் செய்தார். இந்தியாவில் அரசியல்சக்தி, சமுதாய சக்தி, தேசிய சக்தி, ஆன்மிக சக்தி எழுச்சி பெற சுவாமியின் சிகாகோ சொற்பொழிவு தான் அடித்தளமாக அமைந்தது. அவர் ஆயுதமின்றி, அமெரிக்கநாட்டின் சகோதர, சகோதரிகளே என அழைத்து தன் ஆன்மிக பலத்தால் உலகை வென்றார், என்றார்.