பழநி : திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் மலைக் கோவிலில், நேர்த்தி கடனாக, கைக் குழந்தைகளை தங்க தொட்டிலில் இட்டு, பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது.
கொரோனா தொற்று பரவலால், 2020 மார்ச் 20 முதல், நிறுத்தி வைக்கப்பட்ட தங்க தொட்டில் பிரார்த்தனை, நேற்று மீண்டும் துவங்கியது.தங்க தொட்டில் சேவையை, சிறப்பு பூஜைக்கு பின், செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். உதவி ஆணையர் செந்தில் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு வழிக்காட்டுதலை பின்பற்றி, 300 ரூபாயை கட்டணமாக செலுத்தி, தங்க தொட்டில் பிரார்த்தனையை பக்தர்கள் நிறைவேற்றலாம்.